அப்போது நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின்-2

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      சினிமா
Charlie Chaplin-2

Source: provided

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’

டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்- 2’.

இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிக்கிறார்கள்.

இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், செவத்த பொண்ணு பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.. பாடல்கள் எழுதியுள்ளார்,

தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கினார். அவரிடம் படம் பற்றி கேட்ட போது....“பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திரு மணம் நடக்க இருக்கிறது. அதற்காக இரண்டு பேரின் குடும்பத்தினரும் திருப்பதிக்கு போகிறார்கள்.

அப்போது நடக்கும் சம்பவங் களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின்-2’ திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்” என்றார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து