முழுக்க முழுக்க ஆட்டுகிடை போடுபவர்கள் பின்னணியில் உருவான முதல் படம் தொரட்டி

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      சினிமா
Toratti

Source: provided

தமிழ் சினிமாவில் வாழ்வியல் பேசும் எதார்த்த படங்கள்  எப்போதாவது தான் வரும் அந்த வரிசை யில் வர இருக்குற படம் தொரட்டி  இந்த படத்தில் நாயகனாக ஷமன்மித் ரு நடிக்கிறார்.

நாயகியாக  சத்யகலா நடிக்கிறார் மற்றும் அழகு, வெண்ணிலா கபடிக்குழு ஜானகி , ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன்,ஜெயசீலின், முத்துராமன், உட்பட பலர் நடித்துள்ளார்கள். படத்தை மாரிமுத்து இயக்கியுள்ளார்.இசை வேத்சங்கர்,  இந்த படத்தை பற்றி தாயரிப்பாளரும்  கதாநாயகனுமான  ஷமன்மித்ரு கூறும் போது  முழுக்க முழுக்க ஆட்டுகிடைபோடுபவர்கள் பின்னணியில் உருவான முதல் படமாகப்வெளியாக இருக்கிறது.

தொராட்டி  ஆட்டுக்கிடைபோடுபவர்கள் உயரத்தில் இருக்கும் பொருளை எடுக்க பயன்படுத்தும் குச்சியே தொராட்டியை மிகவும் கவுரமாகவும் நினைப்பார்கள் 1980 களில் நடந்த சில உண்மை சம்பவங்களே படமாக உருவாகி இருக்கிறது .

படத்தின் முதல் காட்சியிலேயே 600 க்கும் மேற்பட்ட  ஆடுகள் வரும் . வெந்த சோறு , சுட்ட கறி, பட்ட சாரயம் இவற்றுக்காக நடக்கும் போராட்டமே கதை .நட்பு குடும்பம், வஞ்சம், சூழ்ச்சி அனைத்தும் படத்தில் இருக்கும் படத்தை பார்த்த தயாரிப்பாளர்  சி.வி. குமார் தனது நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகிறார். என்றார்  .ஷமன்மித்ரு

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து