முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டர்-19 2-வது டெஸ்ட் போட்டி: இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்னில் வீழ்த்தியது இந்தியா தொடரையும் கைப்பற்றியது

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : 19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் தொடரில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

பேட்டிங் தேர்வு...

இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளைஞர் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இலங்கை கம்பன்டோட்டாவில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா அதர்வா டைட் (177), பவன் ஷா (282) வதேரா (64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 128.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

3-வது நாள்...

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இளைஞர்கள் அணி 316 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இலங்கை அணியின் சூரியபந்தாரா 115 ரன்னும், தினுஷா 51 ரன்னும், மெண்டிஸ் 49 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஜங்கா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியா பாலோ-ஆன் கொடுத்ததால் இலங்கை அணி 297 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது நாள் ...

நேற்று முன்தினம் 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 150 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேசாய் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து