ராமேசுவரம் திருக்கோவிலில் ஆடித்திருவிழா ஆக,4 ஆம் தேதி தொடக்கம்

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      ராமநாதபுரம்
rmstemple  news

 .ராமேசுவரம்,ஜூலை,31- ராமேசுவரம் ராமநாதசுவாமி  திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்திருவிழா நிகழ்ச்சி அடுத்த மாதம் 4 ஆம் தேதி  தொடங்கப்படவுள்ளதாக திருக்கோயில் இணை ஆணையர்   மங்கையர்க்கரசி தெரிவித்தார்..
  இத்திருவிழா குறித்து   திருக்கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி மேலும் தெரிவித்தது.
 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் ஆடித்திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டிற்கான  திருவிழா ஆகஸ் 4 ம் தேதி சனிக்கிழமை காலையில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் காலை 10.11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கபடவுள்ளது. திருக்கோயிலில் 17  நாள்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் முக்கிய நிகழச்சியான ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு  சுவாமி,அம்மன் எழுந்தருளி அக்னிதீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும்  நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும்,ஆகஸ்ட் 14 ஆம் தேதி  சுவாமி,அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழச்சியும்,ஆகஸ்ட் 15 ஆம் தேதி  இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கோயில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு 17 நாட்களும் சுவாமி அம்மன் தினசரி  ஒவ்வொரு வாகனத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளி திருக்கோயிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கும் நிகழச்சி நடைபெறும்.அதுபோல  திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறும் எனவும்,இப்பணிகளை திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ்,பாலசுப்பிரமணியன்,திருக்கோவில் உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகனன்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,திருவிழா பேஷ்கார் கண்ணன் உள்பட திருக்கோவில் அலுவலர்களும்,ஊழியர்களும் செய்து வருவதாகவும் திருக்கோவில்  இணை ஆணையர் மங்கையர்க்கரசி தெரிவித்தார்.                                                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து