நாடாளுமன்ற தேர்தலின் பூத் கமிட்டியை நாம் விரைவாக அமைத்து செயல்பட வேண்டும் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா வேண்டுகோள்

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      மதுரை
rajan  news

 மதுரை -     முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வரும் நாடாளுமன்ற தேர்தலின் பூத் கமிட்டியை நாம் விரைவாக அமைத்து செயல்பட வேண்டும் என்று மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வட்ட கழக செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் பேசினார்.
    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விரைவாக வருவதையொட்டி முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க பூத் கமிட்டி அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது அதனையொட்டி மதுரை புறநகரில் உள்ள அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதி கழகத்தின் சார்பில் வட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
   இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா சிறப்புரை ஆற்றினார், மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழகக்றிஞர் பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன்  பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம், அவைத்தலைவர்கள், சோ.ராசு, காசிராமன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முனியாண்டி, வட்ட கழக செயலாளர்கள் பொன்முருகன், என்.எஸ்.பாலமுருகன், கோபால், செல்வம், சரவணன்,ஜெயகல்யாணி, கர்ணா, கருத்தமுத்து, முருகேசன், ராம்தாஸ், செல்லப்பாண்டி, சந்திரன், சுப்பிரமணி, சங்கரன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது
    மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்திய திருநாட்டில் யாரும் செய்யாத வகையில் அளப்பரியான சாதனைகளை செய்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களில் மகத்தான வெற்றியை பெற்றுத்தந்து இந்திய தேசத்தில் 3வது பெரிய இயக்கமாக கழத்தை உருவாக்கினார்.
     மிகப்பெரிய வரலாற்றுப்புகழை நமது கழகத்திற்கு பெற்றுத்தந்த புரட்சித்தலைவி அம்மா நம்மிடம் இல்லை ஆனால் இந்த இயக்கத்தையும், ஆட்சியையும், நம்மிடம் விட்டுச்செல்லும் போது இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து அன்னை தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஒரு உன்னதமான லட்சியத்தை நம்மிடம் விட்டுச்சென்றார் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவது நமது கடமையாகும்
     தற்போது இந்த லட்சியத்தை நிறைவேற்றும் முதல் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழகத்தை வெற்றிபெற் வைத்தால் அதுவே நமக்கு வெற்றிக்கு முதல்படி   நமக்கு தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரு மகத்தான பணியை வழங்கியுள்ளனர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணியாகும் இந்த பூத் கமிட்டி அமைக்கும் பணியில் சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அவர்கள் மூலம் கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் நாம் எடுத்துக்கூறிட வேண்டும் என்று அவர் பேசினார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து