கண் தெரியாத மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      விருதுநகர்
ktr news

சிவகாசி- சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் பொதுமக்களை சந்தித்து மனுபெற்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மூதாட்டி ஒருவரின் கண் அறுவை சிகிச்சை செலவு தொகையை ஏற்றுக்கொண்டார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களிடம் மனு பெற்றார். ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் நேரிடையாக மனுக்கொடுத்து குறைகளை தெரிவித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டரிந்தார். பட்டாசு பெண் தொழிலாளி ஒருவருக்கு மருத்துவ செலவிற்கு உதவித் தொகை வழங்கினார். கண்கள் தெரியாத மூதாட்டி ஒருவர் மனுக்கொடுத்தார். மூதாட்டியிடம் அமைச்சர் தகவல்களை கேட்டரிந்தார். சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்றும் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்றும் அமைச்சரிடம் தெரிவித்தார். உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையை தொடர்பு கொண்ட அமைச்சர் மூதாட்டிக்கு வேண்டிய அறுவை சிகிக்சையை மேற்கொள்ளுமாறும் அதற்கான செலவு தொகையை தானே தறுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு மருத்துவ உதவித்தொகையும் வழங்கினார். மூதாட்டி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் அமைச்சர் மனு வாங்கினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து