முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோடுபோட புதிய ஜியோ பாலிமர் கான்கிரீட் புராஜக்ட் !தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்பக்கழகம் முதல்பரிசு வழங்கியது!!

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர் - ஸ்ரீவி.  கலசலிங்கம்  பலகலை  கட்டடவியல்  மாணவர்கள்  பிரகாஷ் சுப்பு,  சுபம் சாவந்,  திலகவேல் ராஜ்  ஆகியோர்  டீன் முனைவர் நீலகண்டன்  துறைத்தலைவர்  ரமேஷ்பாபு  ஆகியோர்                ஆலோசனையின்படி  சிமிண்ட், மணல், தார்மெழுகு  இல்லாமல்   ஜல்லியை மட்டும் பயன்படுத்தி  புதிய ஜியோ  பாலிமர்  துகள்களை சேர்த்து கான்கிரீட் சாலை அமைத்தனர்.
இந்த  சாலையில்,  நீர் வழிந்து ஓடாமல்  நீர் சாலையின் உள்ளேயே  சென்று  கிரகித்து  நிலத்தடி நீரை  உயர்த்தும் என்று கண்டனர்  மேலும் இந்த  ஜியோ  பாலிமர்  பெர்வியஸ்  கான்கிரீட் தற்போது உள்ள  மெழுகு சாலைகளைவிட  அதிக திறன்கொண்டதாகவும்  15 வருடங்களுக்கு  பால் படாமல்  இருப்பதற்க்கு உண்டான திறன்   இந்த புதிய  துகள்களில்  இருப்பதை  சோதனை செய்து  பார்த்தனர்.
மேலும்,  இதே கான்கிரீட் சாலையை  திருச்சியில் நடைபெற்ற  தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்பக்கழகம் மாநில  புராஜக்ட் போட்டியில் செய்து காண்பித்தனர்.
500 மாணவர்கள்  கலந்துகொண்ட இந்தப்போட்டியில்  சிவில்துறை  சார்ந்த  புராஜக்ட்களுக்கான  முதல்பரிசு  கேடயம்,  சான்றிதழ்களை  தழிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்பக்கழக விஞ்ஞானிகள் வழங்கினர்  மேலும் மாணவர்கள் கூறுகையில்  ஒரு  கியூபிக் மீட்டர்அளவு  இந்த புதிய சாலை அமைப்பதற்க்கு   10000ரூபாய்    ஆகும்  என்று  கூறினர்.
புராஜக்ட் போட்டியில்  புதிய  ஜியோ பாலிமர் பொவியஸ் கான்கிரீட்  சாலை அமைத்து  வெற்றி பெற்ற   மாணவர்களையும்,  ஆசிரியர்களையும்   வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன்,  துணைத்தலைவர் முனைவர்  எஸ்.  சசிஆனந்த்,  பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன்  ஆகியோர்  பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து