முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்: ‘1000’-மாவது டெஸ்டில் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      விளையாட்டு
eng team 1000 test 2018 7 30

பர்மிங்காம் : இந்தியாவிற்கு எதிரான பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க 1000-மாவது போட்டியாகும்.

முக்கியமானது...

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இரண்டு அணிக்கும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றியுடன் தொடரை தொடங்க இரு அணிகளும் விரும்பும். இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் கொண்டதாகும். ஏனெனில், இங்கிலாந்து 1877-ம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. புதன்கிழமை தொடங்கும் டெஸ்ட் இந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000-வது டெஸ்ட் ஆகும்.

ஐ.சி.சி. வாழ்த்து...

1000-வது டெஸ்டில் விளையாட இருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி 999 டெஸ்ட் போட்டிகளில் 357-ல் வெற்றியும், 297-ல் தோல்வியையும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. எட்ஸ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902-ல் இருந்து 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 27 போட்டிகளில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவும் செய்துள்ளது.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து