முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாவட்டங்களில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் விரைவில் துவக்கம்- அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 நபர்கள் பயன் பெற்றுள்ளதாகவும், சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் இரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மாவின் அரசில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இம்மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 நபர்கள் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர்.

மேலும் இம்மையத்தினை வலுசேர்க்கும் வகையில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் இரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் 9 நிமிடத்தில் 12 நபர்களுக்குண்டான ரத்த பிரிவுகளை கண்டறிய முடியும். மேலும், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் 177 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தமும், 355 நபர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பும், 4 நபர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு, 14 நபர்களுக்கு தைராய்டு பாதிப்பு, 23பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள், 17 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறிகுறிகள், 11 நபர்களுக்கு பித்தப்பையில் கல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட பெண்ணுக்கு இம்மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார். மேலும், இதுபோன்ற மையங்கள் சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விரைவில் தொடங்கப்படும். மேலும், படிப்படியாக இதுபோன்ற மையங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும்.மேலும் தமிழகம் முழுவதும் 410 அரசு மருத்துவ நிலையங்களில் அம்மா ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41.47 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் 25 பரிசோதனைகள் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அனைத்து பரிசோதனைகளையும் அரசு மருத்துவமனைகளில் செய்து நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நலவாழ்வு பெறவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர். நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து