உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      விளையாட்டு
Saina Nehwal 2018 7 31

பெய்ஜிங் : சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாய்னா நேவால், கிதாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

2-வது சுற்றுக்கு...

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் துருக்கியின் அலியே டெமிர்பேக்கை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-17, 21-8 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஒற்றையர் பிரிவு...

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கிதாம்பி ஸ்ரீகாந்த் அயர்லாந்தின் நாட் நுயனை எதிர்கொண்டார். இதில் 21-15, 21-16 என கிதாம்பி ஸ்ரீகாந்த் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து