முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற கொள்கை முடிவு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிலைக் கடத்தல் வழக்குகள் குறித்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் திருப்தியில்லை என்றும், இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

கொள்கை முடிவு

சிலைக் கடத்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஒரு ஆண்டாக பொன். மாணிக்கவேல் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும், விசாரணை தகவல்களையும் தடுப்புப் பிரிவு தரவில்லை என்றும் தெரிவித்தார்.

கலைக்க உள்ளோம்

மேலும் பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை கலைக்க உள்ளோம். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பணியில் எங்களுக்கு திருப்தியில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை வரும்  8-ம் தேதி தாக்கல் செய்யுமாறு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து