குழந்தைகள் நலனுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd pro news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்து நேரில் ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரோக்கியமான சூழ்நிலையினை ஏற்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இணை உணவு (சத்துமாவு) வழங்கப்பட்டு வருகிறது.  அதேபோல பச்சிளம் குழந்தைகளுக்கு  உரிய கால இடைவெளியில் இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டு, விட்டமின்-ஏ திரவம், இரும்புச் சத்து திரவம் போன்ற ஊட்டச்சத்து திரவங்களும் வழங்கப்பட்டு  வருகின்றன. இதுதவிர 2 முதல் 5 வயதிற்குட்பட்;ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது. 
 அந்தவகையில் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கண்காணித்து பாதுகாத்திடும் விதமாக, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளபடி குழந்தைகளின் வயதிற்கேற்ற வளர்ச்சிநிலை என்பதை அடிப்படையாக கொண்டு குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடை உள்ளதா என்பதை உறுதி செய்திடும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மருத்துவப்பணிகளின் (சுகாதாரப்பணிகள்) துணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான 55 எண்ணிக்கையில் உயரம் மற்றும் மின்னணு திரை கொண்ட எடை அளவீட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிதாக இக்கருவியினை வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அளவீட்டு கருவிகள் மூலமாக அந்தந்த ஊரகப்பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளவீடு செய்யப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீடுகள் சரிநிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது.  அவ்வாறு அளவீடுகள் சரியான நிலையில்  இல்லாத குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திட தேவையான ஊட்டச்சத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 
 அதன்படி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாக சென்று குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி நிலையினை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம்  குழந்தைகளை கவரும் வகையில் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு  படங்கள் திரையிடுவதைப் பார்வையிட்டார்.  அதன்பிறகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணியாளர்கள் மற்றும் ஊரக பொது சுகாதார செவிலியர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று கள ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் குறித்த விபரங்களை நூறு சதவீதம் விடுபடாமல் கணக்கெடுப்பு செய்து கண்காணித்திட வேண்டும்;;.  அங்கன்வாடி மையங்கள் மூலமாக தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின் போது ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் மரு.குமரகுருபரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.கிருஷ்ணவேணி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து