முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற டெட்டனேட்டர் குப்பியுடன் ஆறு பேர் கைது.

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,ஆக,1:  வெடிகுண்டுகள் வெடிக்க பயன்படுத்தப்படும் கருவியான டெட்டனேட்டர் குப்பிகளை ராமேசுவரம் கடல்வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு முயற்ச்சியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார்கள் நேற்று கைது செய்து டெட்டனேட்டர் குப்பிகளை  பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம் கடலோர பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துல் பொருள்கள் கடத்தி செல்லவுள்ளதாக  ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.அதன் பேரில் போலீஸார்கள் ராமேசுவரம் தீவு கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் நேற்றுக்கு முன் தினம் இரவு முழுவதும் ஈடுபட்டனர். அப்போது சேரங்கோட்டை  கடற்கரை பகுதியில்  சந்தேகத்திற்கு இடமாக  நின்று கொண்டிருந்த முகமது முஸ்ஸம்மில்,  பச்சமால், சுப்பிரமணியன்,மகாநதி,ரவி, நம்பு செல்வன், ஆகிய ஆறு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்க்காக 5600  டெட்டனேட்டர்கள் குப்பிகளை மறைத்து வைத்திருந்தது  தெரிய வந்தது.  இதனையடுத்து ஆறு பேரையும் போலீஸார்கள்  கைது  செய்து  டெட்டனேட்டர் குப்பிகளை பறிமுதல் செய்து ராமேசுவரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.அங்கு போலீஸார்கள் வழக்கு பதிந்து 6 பேரிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து