முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்மகன் உசேன் தலைமையில் சந்திப்பு: ஹஜ் புனித பயணத்திற்கு ரூ.6 கோடி மானியம் வழங்கிய முதல்வருக்கு இஸ்லாமியர்கள் நன்றி

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமா அத்தார்கள் நேரில் சந்தித்தனர். ஹஜ் புனித பயணத்திற்கு ரூ. 6 கோடி மானியம் வழங்க உத்தரவிட்டமைக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு முதல் தமிழக அரசு 6 கோடி ரூபாய் மானிய தொகை வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேன் தலைமையில், இஸ்லாமிய அமைப்புகள், ஜமா-அத்தார்கள், தமிழக முதல்வருக்கு பூச்செண்டு, பொன்னாடை போர்த்தி தமது நன்றியை தெரிவித்தனர்.

கோவளம் தமீமுன் அன்சாரி தர்கா மற்றும் மாலீக் தீனார் பள்ளிவாசல் தலைவர் ஒய். ஜாவித் அகம்மது, நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவுச் செயலாளர் ஜனாப் அ. மஹபூப் ஜான், உடுமலைபேட்டை பூர்வீக பள்ளிவாசல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம். தாஹீர் பாஷா, அலி உசேன், பட்டூர் ஜாமியா பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டித் தலைவர் பாஷா, அலி உசேன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் என். இம்தியாஸ், முகம்மது யாசீன், சின்னகரை ஹஜ்ரத் காதர் மஸ்தான், சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் மந்திரி திருப்பூர் சின்னகரை பள்ளிவாசல் ஆலோசனை குழு உறுப்பினர் எம். முகம்மது அலி, கோவளம் தர்கா அக்தார் சி.ஒய்.ஜெ. சல்மான் ஜாவித், மாவட்ட தகவல் தொழில் நுட்பத் துறை பிரிவு இணைச் செயலாளர் சல்மான் ஜாவித், பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத்துல் ஜமாத் துணைத் தலைவர் பூவை எச். சாபி, பூந்தமல்லி பாப்பா பீவி தர்கா, பள்ளிவாசல் ஜமாத் கண்டோன்மென்ட் பள்ளிவாசல் நிர்வாகி, பூந்தமல்லி யாசீன், ஸ்ரீபெரும்புதூர் ஜிம்மா பள்ளிவாசல் நிர்வாகி ஷேக் பஹதூர்.

ஸ்ரீபெரும்புதூர் ஜமாத் நிர்வாகி எம். சேக் அப்துல் காதர், பூந்தமல்லி பள்ளிவாசல் ஆலோசனை குழு உறுப்பினர் எ. அமான், ஸ்ரீபெரும்புதூர் ஜிம்மா பள்ளிவாசல் ஆலோசனை குழு உறுப்பினர் அமான் பாஷா தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் ஜமாத் தலைவர் அப்துல் நாசர், மக்கள் ஜமாத் மாநில செயலாளர் அப்துல் கதீர், தமிழ்நாடு ஹஜ் தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்கம் ஜனாப் ஜியாகான், டெல்லி ஹோலிடே ஜனாப் முகம்மது தப்ரீஸ் உசேன்,

சென்னை எம்.டி.எஸ். ஹஜ் உமரா சர்வீஸ்ஜனாப் எகசான் ஷெரீப். சென்னை எம்.டி.எஸ். ஹஜ் உமரா சர்வீஸ் லேனா இஸ்ஸாக்,கோயம்புத்தூர் அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் நிசார் அகமது, கோயம்புத்தூர் அல் ஆதம் ஹஜ் சர்வீஸ்அப்துல் ஹமீது அன்சாரி, சென்னை அல்மப்ரூ ஹஜ் சர்வீஸ்முகம்மது ஷெரீப், ஆதம் இன்டர்நேஷனல் ஹஜ் சர்வீஸ் பீர் முகைதீன், வக்பு போர்டு வழக்கறிஞர் எம்.கே. கான், முன்னாள் வக்பு வாரிய உறுப்பினர் ஒய். முகம்மது, முத்தவல்லி பாராபத் ஜமாத், திருவல்லிக்கேணி வெங்கடேசன்,தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் வி.எஸ். வேல் ஆதித்தன் ஆகியோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து