முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக குமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் காட்டுக்குப்பத்தில் 9 செ.மீ., மதுராந்தகத்தில் 4 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழையும், அசாம், மேகாலயா, உ.பி., உத்தரகாண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து