கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      சினிமா
actor vijay 2016 11 15

 சென்னை : சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகர் விஜய் நேற்று மருத்துவமனைக்கு வந்தார்.

காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் விஜய். முன்னதாக நேற்று முன்தினம் இரவு முன்னாள் நடிகரும், கருணாநிதியின் மகனுமான மு.க. முத்து தன் குடும்பத்தினருடன் காவேரி மருத்துவமனைக்கு வந்து தந்தையை பார்த்து விட்டு விசாரித்து சென்றார். நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து