முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்றும், அவரது விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனால் சிலை தடுப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. சிலைக் கடத்தல் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்றும்,  பொன். மாணிக்கவேல் இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையைக் கூட தமிழக அரசிடம் தாக்கல் செய்யவில்லை என்றும் எங்கு விசாரணை நடத்த உள்ளார்கள், சோதனை நடத்த உள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையிடம் தெரிவிப்பது இல்லை என்றும் அரசு சார்பில் முன்னதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணைகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கலைத்து விட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து