முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ்(69) மாரடைப்பால் நேற்று அதிகாலை காலமானார். இந்நிலையில் ஏ.கே.போஸ் மறைவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் திடீர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மூன்று முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்களித்த மக்களுக்காக பணியாற்றிய அவரது மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து