முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல சினிமா இயக்குனர் சிவகுமார் மர்ம மரணம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகர் அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிவக்குமார் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் உடல் அழுகிய நிலையில் இறந்துகிடந்தார்.

1997-ம் ஆண்டு நடிகர் அஜீத், மந்த்ரா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ரெட்டை ஜடை வயசு. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் சி.சிவக்குமார். அதே போல, நடிகர் அர்ஜூன் நடித்த ஆயூத பூஜை என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா விரிவு நகரில் அவருடைய வீட்டில் வசித்து வந்தார். கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். பின்னர்தான், ரெட்டை ஜடை வயசு திரைப்படம் மூலம் இயக்குனரானார். இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வந்தார். திரைப்பட வாய்ப்புகள் ஏதுமில்லாததால் தனிமையில் வசித்துவந்தார்.

இந்நிலையில், இயக்குனர் சிவக்குமார் விருகம்பாக்கத்தில் அவருடைய வீட்டில் துர்நாற்றம் வருகிறது என்று அருகில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் விருகம்பாக்கம் போலீசார் அங்கெ சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் இயக்குனர் சிவக்குமார் இறந்து கிடந்துள்ளார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசியுள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த இயக்குனர் சிவக்குமாரின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து