பந்துவீச்சு அபாரம்: அஸ்வினுக்கு, இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் புகழாரம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Keaton Jennings praises Ashwin 2018 8 2

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார்.

முதல் நாள்...

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. சாம்குர்ரான் 27 ரன்னிலும், ஆன்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். முகமதுசமி ஓவரில் சாம்குர்ரான் அவுட் ஆக வேண்டியது. அவரது கேட்சை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

4 விக்கெட்டை...

இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி உள்ளார். அஸ்வினை, இங்கிலாந்து தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

சிறந்த பவுலர்...

அஸ்வின் மிகவும் சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தில் பந்தை வீசினார். மேலும் வேகத்திலும் மாறுபாடு இருக்கும். பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும். அதுபோன்ற பந்தில் அசிஸ்டயர் குக்கை போல்டு ஆக்கினார். காலை வேளையில் இருந்து ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது. நாங்கள் 300 ரன்னுக்கு மேல் எடுப்போம் என்று கருதுகிறேன். அப்படி எடுத்துவிட்டால் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் நெருக்கடி கொடுப்பார்கள். அதேவேளையில் இரு அணிகளும் பேட்டிங் செய்த பிறகுதான் எது நல்ல ஸ்கோர் என்பது தெரியும் என்றார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து