முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: உண்மையான குடிமக்கள் பெயர் விடுபடாது என்கிறார் ராஜ்நாத் சிங்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

அசாமில் குடியேறியுள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்து வருகிறது. இதன் இறுதி வரைவுப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. வங்கதேசத்தவர் குடியேறும் பிரச்சினையை மதரீதியாக பா.ஜ.க. கையாள்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த விவகாரம் மாநிலங்களவையில் நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினையை குறிப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பேசினர். இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அசாம் மாநிலத்தில் குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தல்படியே தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் இந்த பட்டியலில் விடுபட மாட்டார்கள். எதிர்கட்சிகள் இந்த விஷயத்தை அரசியலாக்கி மக்களிடம் பீதியை கிளப்ப முயற்சிக்கக் கூடாது எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து