முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா அடிபணிந்து விட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டோக்லாம் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா அடிபணிந்து விட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன் றது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவம் இடையே 50 நாட்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிக்கும் போது, முதிர்ச்சியான ராஜதந்திரத்தின் மூலம் டோக்லாம் பிரச்சினையில் எவ்வித இழப்பு மின்றி தீர்வு காணப்பட்டுள்ளது. டோக்லாமில் என்ன நிலை காணப் பட்டதோ, அதே நிலை நீடிக்கிறது. அங்கு எந்தவொரு மாற்றமும் இல்லை என்றார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜ் அடிபணிந்து விட்டார். இது நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிகுந்த வீரர் களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

டோக்லாமில் சீனா தனது செயல்பாடுகளை மீண்டும் சத்த மின்றி தொடங்கிவிட்டது. இதற்கு இந்தியாவோ, பூடானோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க எம்.பி. ஒருவர் கூறிய தாக வெளியான செய்தியையும் ராகுல் தனது டுவீட் உடன் இணைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து