முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இணையதளம் கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடுவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களான வாட்ஸ் -அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 13-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது. ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது என கடுமையாக விமர்சனம் செய்தது.

மேலும் இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து