விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகை சிகிச்சை பலனின்றி பலி

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      சினிமா
Malayalam actress-2018-08-03

கொச்சி, பிரபல மலையாள பாடகியும், நடிகையுமான மஞ்சுஷா மோகன்தாஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபல மலையாள சேனல் ஒன்றில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் மஞ்சுஷா மோகன்தாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார். அதன் காரணமாக இவருக்கு படத்தில் பாடக்கூடிய வாய்ப்புகள் நிறைய தேடி வந்தன. மேலும் ஒரு சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளனர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் தனது தோழி அஞ்சனா என்பவருடன் மஞ்சுஷா மோகன்தாஸ் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று இவர்கள் சென்ற பைக் மீது எதிர்பாராத விதமாக பலமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரு வாரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் தோழி அஞ்சனா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி மஞ்சுஷா மோகன்தாஸ் உயிரிழந்தார். இதனால் கேரள திரையுலகமும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து