அலங்காநல்லூரில் தீரன்சின்னமலை நினைவு நாள்.

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      மதுரை
alaga news

அலங்காநல்லூர்.-        மதுரைமாவட்டம் அலங்காநல்லூரில் சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் கடைபிடிக்கும் நிகழ்ச்சி அங்குள்ள கவுண்டர் மகாஜன சங்க வளாகத்தில் நடந்தது.இதில் தீரன் சின்னமலை சிலைக்கு சங்கத்தலைவர் விஜயன் செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன், மற்றும் சங்கநிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன், தலைவர் பார்த்திபன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வரசு, தே.மு.தி.க.வடக்கு மாவட்ட செயலாளர் பாலசந்திரன்,ஒன்றிய செயலாளர் சிவசத்தியசீலன்.
     பல்வேறு அரசியல் கட்சியினர்களும் மற்றும் திரைப்பட நடிகர் ரஞ்சித், மேலசின்னனம்பட்டி அன்னை பழனியம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள், மதுரை, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த கவுண்டர் உறவின்முறையைச்சேர்ந்த நிர்வாகிகளும், இளைஞர்களும், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலிஸ் சூப்பிரண்டு மோகன்குமார் மேற்பார்வையில் போலிசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து