பர்மிங்காம் டெஸ்ட் போட்டி: தனி ஒருவனாய் ஜொலித்த கோலி ! இங்கிலாந்தில் முதல் சதம் அடித்தார்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Kohli-2018 08 03

Source: provided

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 149 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

முதல் சதம்...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது இங்கிலாந்து மண்ணில் அவரது முதல் சதமாகும். கடந்த 2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது 5 டெஸ்டில் கோலி 134 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் இம்முறை இங்கிலாந்து மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய கோலி அதனை சதத்தின் மூலம் நிரூபித்து காட்டி உள்ளார்.

1126 ரன்கள்..

விராட் கோலி ரன் குவிக்க விடமாட்டோம் என்று இங்கிலாந்து வீரர்கள் விடுத்த சவாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் 1000 ரன் கடந்த 13-வது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதுவரை 15 டெஸ்டில் 1126 ரன் எடுத்து உள்ளார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து