முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை மூதாட்டியின் உடலை தோளில் சுமந்து அடக்கம் செய்த எம்.எல்.ஏ.

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் : சாகிக்கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்.எல்.ஏ. ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் பெண்ணின் உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒடிசா மாநிலம், ஜர்சுகுதா மாவட்டத்தில் ரெங்காலி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. ரமேஷ் பட்டுவா. இந்நிலையில், சுதாமல் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமனபள்ளி கிராமத்தில் ஒரு ஏழை மூதாட்டியும், அவரின் சகோதரரும் சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர். பிச்சை எடுத்தும், வீடுகளில் உணவுகளைப் பெற்றும் இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்த இருவரின் சாதி குறித்து அந்தக் கிராம மக்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால் மனித நேய அடிப்படையில் உணவு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், திடீரென அந்த ஏழை மூதாட்டி உயிரிழந்து விட்டார். ஆனால், அந்த மூதாட்டி சாதி என்பது தெரியாததால், ஊர்மக்கள் அந்த மூதாட்டியின் உடலைத் தொட்டு தூக்கி அடக்கம் செய்ய மறுத்து விட்டனர். இதனால் அந்த மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இந்தத் தகவலை எம்.எல்.ஏ. ரமேஷ் பட்டுவாவுக்கு சிலர் தெரிவித்தனர். உடனடியாக தனது இரு மகன்கள் , உறவினர்களுடன் அமனப்பள்ளி கிராமத்துக்கு வந்த அவர் மூதாட்டியின் உடலைத் தனது மகன்களின் உதவியால் தனது தோளில் சுமந்து சென்று இந்து முறைப்படி அடக்கம் செய்தார். அவரது இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒடிசாவில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ரமேஷ் செய்தி குறித்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து