முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இம்ரான்கானின் பதவியேற்பு தள்ளிவைப்பு?

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இம்ரான் கானின் பிரதமர் பதவியேற்பு விழா, 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படலாம் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் டாண் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:-

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் தெஹ்ரீக் - ஏ -இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், தனது பதவியேற்பு விழா வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும், புதிய பிரதமர் பதவியேற்பு விழா பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற வேண்டும் என்று இடைக்கால அரசின் பிரதமர் நாஸிருல் முல்க் விரும்புகிறார். எனவே, இம்ரானின் பதவியேற்பு விழா தள்ளி வைக்கப்படலாம் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் -ஏ -இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து