முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார் ஜனாதிபதி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று ஸ்டாலினிடம் விசாரித்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயகுமார், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

பின்னர் ஜனாதிபதி  உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நலம் விசாரிப்பதற்காக, சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக மதியம் 2.45 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு அவரை தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் உடன் சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் ஸ்டாலினிடமும் மருத்துவர்களிடமும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜனாதிபதி நேராக விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டார்.

இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்கூறப்பட்டுள்ளதாவது:-

கருணாநிதியை சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்வரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து