Idhayam Matrimony

இட ஒதுக்கீடு என்பது வேலையை உறுதி செய்யாது: கட்காரி பேச்சால் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இட ஒதுக்கீடு என்பது வேலையை உறுதி செய்யாது என்று மத்திய போக்குவரத்துது துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமுதாயத்தினர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடத்தி வரும் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியது. இதற்கிடையே ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அந்த சமூகத்தினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதனைக் குறிப்பிடும் விதமாக இட ஒதுக்கீடு என்பது வேலையை உறுதி செய்யாது என்று மத்திய போக்குவரத்துது துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், இங்கு வேலை கிடையாது. தகவல் தொழில்நுட்பம் உதவியால் வங்கிகளில் வேலை வாய்ய்ப்பு குறைந்து விட்டது. அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பும் குறைந்திருக்கிறது. எல்லோரும் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் என்கிறார்கள். எந்த மதமாகவோ இருக்கலாம், ஜாதியாகவோ இருக்கலாம், அனைத்து சமூதாயத்திலும் உடுத்த உடையும், உண்ண உணவும் இல்லாத மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே பொதுமக்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு வேண்டுமானால் இடஒதுக்கீடு வழங்கப்படலாம். மகராஷ்டிராவில் நிலவும் சூழ்நிலையை சரிசெய்ய முதல்வர் பட்நவீஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொதுமக்களும் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து