ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      ஆன்மிகம்
tirupathi 2017 1 7

திருமலை : திருப்பதி ஏழுமலையானை பல்வேறு சேவைகள் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய 67,567 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட்டது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு சேவைகள் மூலம் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 67,567 சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதை பெறுவதன் மூலம் வரும் நவம்பர் மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.

ஆன்லைன் குலுக்கல் முறையில் மொத்தம் 10,767 டிக்கெட்டுகளும், பொது ஆன்லைன் மூலம் விசேஷ பூஜை 2000, கல்யாண உற்சவம் 12825, ஊஞ்சல் சேவை 4050, ஆர்ஜித பிரம்மோற்சவம் 7425, வசந்தோற்சவம் 14300, சகஸ்ர தீப அலங்கார சேவை 16200 என மொத்தம் 67,567 சேவா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து