ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
ktr news

விருதுநகர்- விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் என்று அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்பி, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, கழக மகளிரணி இணைச்செயலாளர் சக்திகோதண்டம், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை சிறப்பாக நடத்திவரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்திடும் வகையில் அம்மா பேரவை சார்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரச்சார பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. கழக அரசின் ஓராண்டு சாதனையை தமிழக மக்களுக்கு விளக்கும் வண்ணமாக மாபெரும் சைக்கிள் பேரணியை மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் சைக்கிள் பிரச்சாரமாக சிவகங்கை மாவட்டத்தில் பேரணி துவங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 21 சட்டமன்ற தொகுதியில் பேரணி நடைபெறுகின்றது. வரும் ஆகஸ்டு 13ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சைக்கிள் பேரணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 14ம் தேதி சாத்தூரில் துவங்கும் சைக்கிள் பேரணி சாத்தூரில் உள்ள பல்வேறு குக்கிராமங்களில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. அதனையொட்டி ராஜபாளையம் வழியாக சைக்கிள் பேரணியாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. ஆகஸ்டு 14-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்டு பல்வேறு பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து சிவகாசி தொகுதிக்கு வந்தடைந்து, அங்கு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அரசின் சாதனைகளை எடுத்துரைக்கின்றனர். ஆகஸ்டு 15ம் தேதி சிவகாசியில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சைக்கிள் பேரணியாக சென்று விருதுநகரை வந்தடைகின்றனர். அங்கு நகரின் பல்வேறு இடங்களில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அருப்புக்கோட்டை தொகுதிக்கு சைக்கிள் பேரணியாக சென்று பல்வேறு இடங்களில் சாதனை முழக்கமிட்டு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். அதனையொட்டி ஆகஸ்டு 16-ம் தேதி அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் சாதனைகளை எடுத்துரைத்து காரியாபட்டியில் சைக்கிள் பேரணியை நிறைவு செய்கின்றனர் .சைக்கிள் பேரணி விருதுநகர் மாவட்டத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற வேண்டும். ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி- புதுப்பட்டிகருப்பசாமி, சாத்தூர்-சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்கு-எதிர்கோட்டைமணிகண்டன், வெம்பக்கோட்டை மேற்கு-ராமராஜ், திருவில்லிபுத்தூர்-மயில்சாமி, ராஜபாளையம் கிழக்கு-வேல்முருகன், ராஜபாளையம் மேற்கு-குருசாமி, விருதுநகர்-மூக்கையா, அருப்புக்கோட்டை-சங்கரலிங்கம். காரியாபட்டி-கரியனேந்தல்ராமமூர்த்திராஜ், நரிக்குடி- பூமிநாதன், திருச்சுழி- முத்துராமலிங்கம், நகர செயலாளர்கள் சிவகாசி- அசன்பதூரூதீன், திருத்தங்கல் -பொன்சக்திவேல், திருவில்லிபுத்தூர்- பாலசுப்பிரமணியன், ராஜபாளையம்- பாஸ்கரன், சாத்தூர்- வாசன், அருப்புக்கோட்டை- கண்ணன், விருதுநகர்- நைய்னார் முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், கருப்பசாமிபாண்டியன், பழனி, அவைத்தலைவர் விஜயகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைசெயலாளர் சேதுராமானுஜம், விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூக்கையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், பேரூராட்சி செயலாளர் அய்யனார், விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா உட்பட கட்சியின் அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து