ஆறாவதுபடைவீடு சோலைமலை முருகன்கோவிலில் ஆடிகிருத்திகை விழா.

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      மதுரை
adi fest news

  அலங்காநல்லூர்.-        மதுரைமாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவதுபடைவீடான சோலைமலை முருகன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொருமாதமும் பல்வேறுதிருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடிமாதம் நடைபெறும் கிருத்திகைவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் மூலவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேசங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் வைரவேல் மற்றும் திருஆபரணங்கள் சாத்தப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வலது புறம் உள்ள வித்தக விநாயகர், இடதுபுறம் உள்ள ஆதிவேல் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
      ஆடிமாதம் வரும் கிருத்திகைக்கு என்று தனிசிறப்பு உண்டு.இதையட்டி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு கும்ப கலச தீர்த்தம், பால், பழம், பன்னிர், விபுதி, சந்தனம், புஷ்பம், உள்ளிட்ட 16-வகையான அபிஷேகங்கள் அலங்காரம், தீபாராதனைகள், மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.இந்த விழாவின்போது மதுரை விரகனூர், குலமங்கலம் திருப்புகழ்சபையினர், கானூர், விராலிமலை, திருச்சி, சென்னை, மற்றும் தன்டலை பழனிபாதயாத்திரை குழு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த விழாவையட்டி நேற்று அதிகாலையிலிருந்து இரவுவரை ஏராளமான முருக பக்தர்கள் கோவிலுக்கு வந்து நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருப்புகழ்சபையினர் சார்பாக பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் மலைஅடிவாரத்தில் இருந்து இக்கோவிலுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு சிறப்பு கட்டண வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.
       ஆடிகிருத்திகை என்பதால் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.மலைஅடிவாரத்திலுள்ள கள்ளழகர், பதினேட்டாம்படி கருப்பணசுவாமி கோவில்களிலும் பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த  விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து நேரடி மேற்பார்வையில் அலுவலக கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் திருகோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து