நயினார்கோவில் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
paramakudi news

  பரமக்குடி -  இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஒன்றியத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவில் ஆடி மாதம் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா ஆடி மாதம் 19 ம் தேதி (03.08.2018) கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடி மாதம்  27 ம் தேதி (12.08.2018) காமதேனு வாகனத்தில் அம்மன் தேரோட்டம் நடைபெறும்.ஆடி மாதம் 30 ம் தேதி (15.08.2018) நாகநாத சுவாமி-சௌந்தர நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.ஆவணி மாதம் 7 ம் தேதி (23.08.2018) வரை நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது.இவ்விழாவை கான சுற்றுவட்டாரம் பகுதிகளிருந்தும்,தமிழகத்தில் பல்வேறு ஊர்களிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் பெறுவார்கள்.இவ்விழாவை பரம்பரை அறங்காவலர், இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சேதுபதி ராணி இராஜேஸ்வரி நாச்சியார், திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர், இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் வழக்கறிஞர் மகேந்திரன்,நயினார்கோவில் சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து