முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராடி தோற்றது பெருமை அளிக்கிறது - விராட் கோலி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்287 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில்274 ரன்னும் எடுத்தன. இங்கிலாந்து 2-வது இன்னிங்சில்180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 194 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ரன்னை எடுக்க முடியாமல் இந்திய அணி 182 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணி தனது ஆயிரமாவது டெஸ்டில் வெற்றி  பெற்று முத்திரை பதித்தது.

இந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனி ஒருவராக கடுமையாக போராடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றி பெற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்து  இருக்கும். இந்த ஆட்டத்தில் அவர் கொஞ்ச நேரம் நிலைத்து இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த தோல்வி குறித்து கோலி கூறியதாவது, இந்த டெஸ்ட் மிகவும் சிறப்பானது. இந்த போட்டியில் நாங்கள் பலமுறை திறமையை வெளிப்படுத்தினோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடி இருக்கலாம். இந்த டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமையளிக்கிறது. இந்த போராட்டம் பிடித்து இருக்கிறது. மிகப் பெரிய தொடரில் இது போன்ற தொடக்கம் பெருமையானது. பின்வரிசையில் விளையாடும் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கோலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து