முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் ஜெயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ஆவடி முகமது சாலேஹ் பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 480 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினா்.

இதில் அமைச்சா் டி.ஜெயக்குமார் பேசியதாவது,

கல்லூரிகளில் படித்து முடித்து விட்டு வரும் லட்சக்கணக்கான மாணவா்களுக்கு ஓராண்டுக்குள் அல்லது ஐந்தாண்டுகளுக்குள் முழுமையான வேலைவாய்ப்பை எந்த அரசாலும் வழங்க முடியாது. தமிழகத்தில் 5 லட்சம் காலிப் பணியிடங்களில் இதுவரை 2.75 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2.25 லட்சம் இடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

வேலைக்குச் செல்வது என்பது பாதுகாப்பானது. முதல் தேதி சம்பளம் கிடைத்து விடும். ஆனால் தொழில் முனைவோராக நிச்சயமற்ற தன்மைகளையும், நிறைய போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் மாணவா்கள், இளைஞா்களிடம் மேலோங்கியிருக்கிறது. அதிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும்.

தமிழகத்தில் தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்ளும் இளைஞா்களுக்குத் தேவையான உதவிகளை அரசு வழங்குகிறது. இதன் மூலம் வேலை தேடுபவா்கள் என்ற நிலையிலிருந்து வேலை கொடுப்பவா் என்ற நிலைக்கு உயர முடியும். வாழ்வதற்குப் போராட்டம் அவசியம். போராட்டம் இல்லாத வாழ்க்கையில் சுவை இருக்காது என டார்வின் கூறியதை மாணவா்கள் வாழ்க்கைப் பாடமாக நினைக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து