முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்காரம் செய்த 9 சிறுமிகளில் 3 பேரை கொன்றவருக்கு 12 மரண தண்டனைகள் - பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 9 சிறுமிகளை பலாத்காரம் செய்து 3 பேரை கொன்ற நபருக்கு 12 மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த சைனப் என்ற 7 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் இம்ரான் அலி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு மரண தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இம்ரான் அலி இதுபோன்று மேலும் 8 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதில் ஆயிஷா, லைபா மற்றும் நூர் பாத்திமா என்ற 3 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை கொன்ற வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனைகளை விதித்து உத்தரவிட்டனர். ஒவ்வொரு கொலைக்கும் 4 தூக்கு தண்டனைகள் விதித்து உள்ளனர். மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து