முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை எங்கே இருக்கு? கட்காரி கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இடஒதுக்கீடு கேட்கும் மராத்தா மக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வேலை எங்கே இருக்கிறது என்று கூறியிருந்தததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒவ்வொரு இந்தியனும் இதைத்தானே கேட்கிறான் என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவுரங்காபாத் சென்றிருந்த போது மகராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இட ஒதுக்கீடு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அரசு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ஐ.டி. துறை வந்த பிறகு வங்கிகளிலேயே வேலைகள் குறைந்து விட்டன. அரசு வேலைவாய்ப்புகள் முற்றிலும் முடக்கப்பட்டு விட்டன. வேலை எங்கே இருக்கிறது? என்று அவர் செய்தியாளர்களையே திருப்பிக் கேட்டார்.

இதற்கு ராகுல் காந்தி நேற்று பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மிகச் சிறந்த கேள்வி கட்காரி ஜி. ஒவ்வொரு இந்தியனும் இதே கேள்வியைத்தான் கேட்கிறான். கட்காரி கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஊடக அறிக்கையையும் அதில் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து