முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது நீதிபதி வரவில்லை! காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழக்கு விசாரணை 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பு வாசிகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சிப் பிரிவுகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, சட்டப்பிரிவு 35ஏ-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு சுப்ரீம் கோர்ட்டை கேட்டுக் கொண்டது.

ஆனால் ஜம்மு காஷ்மீர் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி சந்திரசூட் வராத காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி உத்தரவின் பேரில் கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்பில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 35-ஏ, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தையும், சில உரிமைகளையும் வழங்குகிறது. அந்தச் சட்டப் பிரிவின்படி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து