முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அந்தஸ்து: பார்லி.யில் மசோதா நிறைவேற்றம்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையங்களுக்கு நிகராக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அரசமைப்பு அந்தஸ்து அளிக்கும் வகையிலான இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு எதிர்க்கட்சிகள் வழங்கிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டு அந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதா, திருத்தங்கள் மீதான ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது. அந்தத் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அங்கு இந்த மசோதா அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது இந்திய அரசமைப்பின் 123-ஆவது சட்ட திருத்த மசோதாவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து