முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்புகளை தானம் செய்தார் சந்திரபாபு நாயுடு

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வாரம் நேற்று முதல் தொடங்கி கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிக்கை வெளியிட்டார்.

அதில், விபத்தில் அகால மரணம் அடைபவர்களின் உடல் உறுப்புகள் தானம் வழங்குவது தொடர்பாக அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், உடல் உறுப்பு தானம் தொடர்பாக விரைவில் பாடத்திட்டம் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெற கட்டாய உடல் உறுப்பு தானம் வழங்கும் திட்டம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த விழிப்புணர்வு வாரத்தை அடுத்து அதிகளவில் அனைவரும் முன்வந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அம்மாநில அரசின் ஜீவாந்தன் என்ற உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு அமைப்பில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்வந்தனர். இது டெல்லியைச் சேர்ந்த இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய நிகழ்வாக அமைந்ததாக அதன் உறுப்பினர் ராகேஷ் வர்மா தெரிவித்தார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக நேற்று  அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து