முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய 152ம் ஆண்டு கொடி ஏற்று விழா

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத்தின் 152ம் ஆண்டு விழாவின் கொடி ஏற்று விழா நடந்தது.
 கொடைக்கானல் செயின்ட் மேரிஸ் சாலையில் அமைந்துள்ளது புனித சலேத் அன்னை ஆலயம். உலகிலேயே பிரான்ஸ் நாட்டிற்கு அடுத்து சலேத் அன்னைக்கு கொடைக்கானலில் மட்டுமே ஆலயம் அமைந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேலாக மிக பழமை வாய்ந்த ஆலயம் இந்த ஆலயம் ஆகும். செயின்ட் சீர் என்ற ஆங்கிலேய பாதிரியாரால் அமைக்கப்பட்ட இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் 152ம் ஆண்டு திருவிழா வின் தொடக்கமாக கொடி ஏற்று விழா நடந்தது.
 கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயத்தில் இருந்து அன்னையின் திரு உருவம் பதித்த கொடியானது கொடைக்கானல் மறை வட்ட அதிபர் அருட்தந்தை எட்வின் சகாயராஜா தலைமையில் அர்ச்சிக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக இறைமக்களால் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு மாலை புனித சலேத் அன்னை ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் இந்த ஆலயத்தில் கொடியேற்று விழா சிறப்பு திருப்பலி புதுப்பட்டி பங்குத் தந்தையும் முன்னாள் கொடைக்கானல் வட்டார அதிபர் தந்தையுமான அருட்தந்தை அப்போலின் கிளாரட்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த திருப்பலிக்கு கொடைக்கானல் வட்டார அதிபர் அருட் தந்தை எட்வின் சகாயராஜா முன்னிலை வகித்தார். மதுரை மறை மாவட்ட கல்;வி கண்காணிப்பாளர் அருட்தந்தை அந்தோனிராஜ் மறையுறை ஆற்றினார். திருப்பலியில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலய உதவி பங்குதந்தையர் சேவியர் அருள்ராயன், செல்வராஜ், மற்றும் கொடைக்கானல் மறைவட்ட பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர். கொடி பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் கொடைக்கானல் நகர் மன்றத் தலைவர் ஸ்ரீதர், துணைத் தலைவர் எட்வர்டு, முன்னாள் நகர் மன்றத் தலைவர் முகமது இப்ராகிம்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 சிறப்பு திருப்பலி முடிந்தஉடன் சலேத் அன்னையின் திரு உருவக் கொடியினை அருட் தந்தை அப்போலின் கிளாரட்ராஜ், வட்டார அதிபர் அருட் தந்தை எட்வின் சகாயராஜா ஆகியோர் திருவிழாவின் தொடக்கமாக ஏற்றி வைத்தனர்.
 இந்த கொடி ஏற்று விழாவினை தொடர்ந்து புனித சலேத் அன்னையின் ஆலயத்தில் நாள் தோறும் மாலை நவ நாள் திருப்பலிகள் நடைபெறும்.
 வரும் ஆகஸ்ட் 14,15 ஆகிய இரண்டு நாட்களும் கொடைக்கானல் புனித சலேத் அன்னையின் திருவிழா நடைபெறும். திருவிழாவில் அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து