கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu pro news

மதுரை- மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான 959 மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு கோரி, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
 பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பததை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  .கொ.வீர ராகவ ராவ், உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மதுரை மேற்கு வட்டத்தின் சார்பில் இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்.
      இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  ரெ.குணாளன்  , பயிற்சி ஆட்சியர்  கே.எம்.பிரவீன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)  .ராஜசேகரன்  , துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.கோட்டைகுமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  .நிர்மலாராஜம் அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .பிரம்மநாயகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து