பெண்கள் சூப்பர் லீக் கிரிக்கெட்: ஒட்டுமொத்த சாதனையையும் தனதாக்கிய ஸ்மிரிதி மந்தனா

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      உலகம்
Smriti Mandhana 2018 8 6

லண்டன் : இந்திய வீராங்கனை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான சூப்பர் லீக்கில் ஒட்டுமொத்த சாதனைகளையும் படைத்துள்ளார்.

அறிமுக தொடரில்...

இங்கிலாந்து பெண்களுக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியில் முதன்முறையாக இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா இடம்பிடித்து விளையாடி வருகிறார். அறிமுக தொடரிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 338 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

சாதனைகள்...

இதன்மூலம் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். இந்த தொடரில் அதிக ரன்கள் (338) அடித்ததுடன் அதிகபட்ச ஸ்கோர் (102), அதிக சராசரி (85), ஸ்டிரைக் ரேட் (184), அதிக பவுண்டரி (34), அதிக சிக்ஸ் (19) சாதனைகளையும் படைத்துள்ளார். 2016 ரன்னரும், 2017 சாம்பியனும் ஆன ஸ்டோர்ம் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று லாபோரோவ் லைட்டினிங் அணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து