முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மு.க.அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து