முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 633 கன அடியிலிருந்து 10 ஆயிரத்து 429 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்துள்ளது. 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்த‌து. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரத்து 487 கனஅடியில் இருந்து 11 ஆயிரத்து 633 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர்இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 429 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 118.61 அடியாகவும், நீர் இருப்பு 91.27 டி.எம்.சி.யாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 18 ஆயிரத்து 300 கனஅடியாகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து