முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இன்று பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வருகை

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி இன்று சென்னை வரவிருக்கிறார்.

கருணாநிதியின் மறைவினை அடுத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் இன்று சென்னை வர உள்ளனர். இந்நிலையில் கருணாநிதி மறைந்ததால், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இன்று பிரதமர் மோடி வர உள்ளார்.

அதே போல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஏற்கனவே கருணாநிதியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். அவரும் இன்று சென்னை வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இன்று சென்னை வர உள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும் இன்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் சென்னை வர உள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து