முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர் போரட்டத்தில் வன்முறை: வங்கதேச அரசு மீது மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா : வங்கதேசத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அந்த நாட்டு அரசு அடக்குமுறையை கையாண்டதாக சர்வதே மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வங்கதேசத்தில் அமைதியான முறையில் போராடி கொண்டிருந்த மாணவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தடியை கொண்டும், அரிவாளை கொண்டும் கடுமையான தாக்குதல் நிகழ்த்தியுள்னர்.

செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தவறான செய்திகளை பரப்பியதாக புகைப்பட செய்தியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, விபத்துகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கான தண்டனையை கடுமையாக்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து