மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு பதிவு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      உலகம்
najib-razak 2018 8 8

சிங்கப்பூர் : மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் 1எம்.டி.பி. முறைகேடு தொடர்பாக அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

1எம்.டி.பி. ஊழல் வழக்கில், அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீது பதிவு செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அவரிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018 மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நஜீப் ரஸாக், தனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 267 கோடி மலேசிய ரிங்கிட் பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து