எம்.ஜி.ஆர் - கருணாநிதி நட்புக்கு உதாரணம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
MGR-Karunanidhi 2018 8 8

சென்னை : மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடனான நட்பு குறித்து கருணாநிதி கூறியதாக தகவல்களை இங்கே பார்ப்போம்.

கல்லக்குடி ரயில் போராட்டத்தில் திருச்சியில் அடைக்கப்பட்ட கருணாநிதி, விடுதலையாகி ரயில் மூலம் சென்னை வந்தார்.  அப்போது ரயில் நிலையத்தில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் வசமாக சிக்கி கொண்டார் கருணாநிதி.

அந்த கூட்டத்திலிருந்து கருணாநிதியை குனிந்து தூக்குகிறார் எம்.ஜி.ஆர். கூடியிருந்த மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது எம்.ஜி.ஆரின் கையிலிருந்த விலைமதிப்புமிக்க கடிகாரம் ஒன்று தொலைந்து போய் விட்டது. அச்சச்சோ.. வாட்ச் தொலைஞ்சிடுச்சே என்று கருணாநிதி வருத்தப்பட, அது வெறும் வெளிநாட்டு கடிகாரம்தான். அது போனால் என்ன. உள்நாட்டு தலைவரான உங்களை (கருணாநிதி) காப்பாற்றுவதுதான் முக்கியம். உங்களை காப்பாற்றியதற்காக எத்தனை வாட்ச் தொலைந்தாலும் பரவாயில்லை என்றாராம் எம்.ஜி.ஆர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து